பச்சை உத்தரிய மகிமை மாதா ஆலயம்

Back to list
நோய் வேளையில் மன்றாட்டு
...

 இரக்கமுள்ள குழந்தை இயேசுவே! நோயாளிகளுக்கு நீர் காட்டிய கருணை எனக்குத் தெரியும். இவ்வுலகிலே நீர் வாழ்ந்தபோது நோய்களையும், அங்கம் குறைந்தவர்களையும், தீராத நோயால் துன்புற்றோரையும், உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர்.
இந்து இந்த உமது திருசுரூபத்தை நாடிவரும் ஆயிரமாயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான, படுமோசமான நோய்களில் இருந்து உம்மால் தான் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். குழந்தை இயேசுவே நான் ஒரு பாவி; துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன்; உமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்கு தெரியும். என்றாலும் எண்ணற்ற வரங்களையும் நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும், மாபெரும் பாவிகளுக்குக் கூட நீர் மனம் இறங்கி அளித்து வருகின்றீர். ஆகையால் என்னையும் நீர் குணமாக்க முடியும் என்று இன்னும் அதிகமாக நான் விரும்புகிறேன். வானக மருத்துவரே! இந்த .........................நோயினின்று (நோயை குறிப்பிடுக) நான் குணமடைய வேண்டும் என்பதற்காக, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும், எல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும். பெற்ற குணத்திற்கு மூலக்காரணம் மருந்தல்ல; எல்லாம் வல்ல உமது தெய்வீக ஆற்றல் என்பது எல்லோருக்கும் புலனாகும்படி எனக்கு சுகமளித்தருளும். – ஆமென்.