பச்சை உத்தரிய மகிமை மாதா ஆலயம்

Back to list
புனித சூசைப்பரே (சூசையப்பரே) 1900 Years Old
...
புனித சூசைப்பரே! உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமைமிக்கது. இறைவனின் சந்நதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. எனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உமது அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உமது வல்லமை மிக்க பரிந்துரையால் உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுதாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும் ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசைப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதாகாலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம்மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே! எங்களுக்காக மன்றாடும். ஆமென்.