அப்பா பிதாவே! நான் வாழ்வதற்காக,
உமது ஏக மகனாகிய கிறிஸ்து இயேசுவை எனக்காகவே அனுப்பினீர்.
மகிமையான அந்தப் புதுவாழ்வு என்னில்
இப்பொழுது செயல்படுவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.
இந்தப் புதுவாழ்வை முறையோடு வாழ எனக்குக் கற்றுத் தாரும்.
உமக்கு பணி புரியவும், உம் சித்தத்தை நிறைவேற்றவும்,
என்னில் உதிக்கும் தீய எண்ணங்களும்,
எனது அறியாமையும் தடையாய் இருக்கின்றன
என்பதை ஒப்புக் கொள்கின்றேன்.
இப்பொழுது எனக்கு நீங்கள் கொடுத்து
என்னில் வேலை செய்யும் இந்தப் புதிய
வாழ்வில் இருக்கும் பரலோகத்தின் சக்தியை நான் நம்புகிறேன்.
இந்தப் புதிய வாழ்வை வாழும் வழிகளை எனக்குக் காட்டி,
என்னைத் தன் பரிசுத்த ஆவியின் வல்லமையில்,வாழ்வும்,
வழியுமான என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,
தன் அன்பின் போதனையினால் என்னை உம்மிடம்
ஒப்படைப்பார் என நம்புகிறேன். ஆமென்.