பச்சை உத்தரிய மகிமை மாதா ஆலயம்

Back to list
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் செபம்
...

கன்னிமரியே, 
அழகு அன்புத் தாயே, 
மன்றாடும் குழந்தையை ஒருபோதும் புறக்கணியாத அன்னையே ,
உமது திரு இதயத்தில் இருந்து பெருக்கெடுத்து வழியும் அன்பினாலும்
முடிவில்லாத இரக்கத்தினாலும் குழந்தைகள் எமக்காய் அயராது உழைக்கும் திருக்கரங்கள் கொண்ட திருவே ,
உமது கருணைப் பார்வையை எம் மீது திருப்பி எமது வாழ்வை திணற வைக்கும் முடிச்சுகளைக் கண்ணோக்கியருளும்.
எனது துன்பம் , வலி , செயலிழக்கச் செய்யும் துன்ப முடிச்சுகள் அனைத்தையும் நீர் அறிவீர் 
எங்கள் வாழ்க்கை நூலில் விழும் முடிச்சுகளை அவிழ்க்க கடவுளிடமிருந்து பொறுப்பு பெற்ற தாயே 
உமது திருக்கரங்களில் என் வாழ்வை ஒப்படைக்கிறேன் .
உமது இரக்கப் பெருக்கை ஒரு போதும் ஒருவரும் நிறுத்த முடியாதென்றும் .உம்மால் அவிழ்க்க முடியாத முடிச்சு உலகில் ஒன்றுமில்லை என்றும் நம்புகிறேன் .
வல்லமையின் தாயே
ஆண்டவர் இயேசுவிடம் பரிந்து பேசும் உமது பலத்தினால் என்னை வாட்டி வதைக்கும் இந்தச் சிக்கலான முடிச்சுகளை ( உங்கள் துன்ப முடிச்சுகளை நினைத்து ஒப்படைக்கவும் )
உமது தூய திருக்கரங்களில் பெற்றுக் கொள்ளும்
தந்தையாம் கடவுளின் உன்னத மகிமை வெளிப்படும்படி
எனது துன்ப முடிச்சுகளை இப்போதும் என்றென்றைக்கும் அவிழ்த்துப் போடும் 
எனக்கு ஆறுதல் வழங்க கடவுளால் அருளப்பட்டவர் நீர் 
எனது பலவீனத்தில் எனது வலிமை நீர்
உம் திருமகன் யேசுவிடமிருந்து என்னைப் பிரிக்கும் சக்திகளை அழிப்பவர் நீரே 
அம்மா ! எனக்குப் பதில் தாரும் பாதுகாத்தருளும் 
வழிநடத்தும் காப்பாற்றும் 
ஏனெனில் நீரே என் உறுதியான அடைக்கலம் 
உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன் ஆமென்