பச்சை உத்தரிய மகிமை மாதா ஆலயம்

Back to list
அர்ச்சியசிஷ்ட சந்தியாகப்பர் மன்றாட்டு மாலை
...
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
தேவ மாதாவால் மிகவும் நேசிக்கப்பட்ட சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கலிலேயா நாட்டைசேர்ந்த செபதேயு என்பவருக்கு அருமை மகனான சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதர் சுவாமி உம்மை அழைத்தபோது மனமுவந்து அவரை பின் சென்ற சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அவராலே உம்முடைய சகோதரனோடு இடியின் மக்கள் என்று அழைக்கப்பட வரம் பெற்ற சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதர் சுவாமி உருமாறின போதும், நூற்றுவ தலைவனின் இறந்த மகளை உயிர்பிக்கும் போதும் அவர் அருகே இருந்த சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதர் சுவாமி பூங்காவனத்திற்கு போகும் போது அவரோடு போகும் பேறு பெற்ற சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதர் சுவாமி வானகம் சென்றபின் அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்று யூதேயா தேசத்திலும், சமாரியா தேசத்திலும் போதித்த சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஸ்பெயின் நாட்டில் பலருக்கு வேதமறையை போதித்து மாய வித்தைக்காரனாகிய இரமோசன் என்பவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்த சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுகிறிஸ்து நாதர் சுவாமியினுடைய வேதத்தை திடனோடு போதித்த கேட்ட ஏரோது அகரிப்பா என்பவன் உமக்கு மரணத் தீர்வையிட்டபோது மகா மகிழ்ச்சி அடைந்த சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உம்மை கொலைக் களத்திற்கு கூட்டிக்கொண்டு போகும்போது உம்மோடு கூட வந்தவன் நீர் வேத சாட்சியாவதற்கு உமக்கிருந்த அகமகிழ்ச்சியை கண்டு தானும் கிறிஸ்தவன் என்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்த சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இவன் கொலைக் களத்திற்கு போய்ச் சேர்ந்தவுடனே, உம்மைக் கொலைக் களத்திற்கு சேவகனாக கூட்டிக்கொண்டு வந்ததை நினைத்து உம்மிடம் பொறுத்தல் கேட்டபோது அவனைத் தழுவி முத்தமிட்டு “ உனக்கு சமாதானம் உண்டாகுக “ என்று வாழ்த்திய சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நூறு சம்மனசுக்கள் உம்மைச்சூழ்ந்து வர இத்தாலி நாட்டிற்கு போய் திருச்சபையை போதித்து அவ்விடத்தில் இயேசு நாதர் ஸ்வாமியினுடைய வேதத்தை போதித்துக்கொண்டே ஸ்பெயின் தேசத்திற்கு வந்த சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அற்புதமான வகையாய் எபேசு நகரில் தேவ அன்னையைக் கண்டு அவள் பாதத்தில் விழுந்து வணங்கிய சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அப்போது தேவ அன்னை உம்முடைய கரத்தைப் பிடித்து தூக்கவும் அனேக வரங்களை அந்த ராக்கினியிடத்தில் பெற்றுக்கொண்ட சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அப்போது நீர் ஜெருசலேம் பட்டணத்திலே வேதசாட்சியாகப் போகிறீரென்று தேவ அன்னை சொல்லக்கேட்டு அத்தருணத்தில், எனக்கு உதவியாக வரவேண்டுமென்று அவளைக்கேட்டுக் கொண்ட சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஜெருசலேம் பட்டணத்தில் மகா தைரியத்தோடு வேத மறையை போதிக்கும்போது திருமறையின் எதிரிகளாலே பிடிபட்டடு, தேவ அன்னை கொடுத்த வாக்கை கேட்டு அவளை நோக்கி மன்றாடிய சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
அந்நேரத்தில் தேவ அன்னை அநேக தூதர்களால் புடைசூழ வருவதை கண்டு அக்களித்து ‘துன்புற்றோருக்கு தேற்றவே ‘ என அகமகிழ்ந்து உரத்த சத்தமாய் கூவின சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உம்முடைய சிரசை வெட்டும்போது தேவ அன்னை உம் ஆன்மாவைக் கையில் ஏந்தி இயேசு நாதருக்கு ஒப்புக்கொடுக்க வரம் பெற்ற சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உம்முடைய திருச்சரீரம் கொம்பெஸ்தெல்லா என்கிற பட்டணத்துக்கு கொண்டு போகப்பட்டபோது அவ்விடத்தில் அற்புதங்கள் பல நடக்கவே மக்கள் பொறுத்தனை செய்து வணங்கப்பட்ட சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
நீர் வானகம் சென்ற பின் ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்தவர்கள் பேரில் பகைவர் படையெடுக்கும்போது, அவர்கள் உம்மை பார்த்து வேண்டுதல் செய்ய பயங்கர தோற்றமுள்ள வெள்ளைக்குதிரை மீதேறி வந்து, பகைவர் படையை முறியடித்துத் துரத்திய சந்தியாகப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
எங்களுக்கு பாதுகாவலரான அர்ச்சியசிஷ்ட சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
ஆமென்.